தினமும் ஒரு மணித்தியாலம்



சிறுவர்களாயினும் பெரியவர்களாயினும் வயது வேறுபாடின்றி இன்று அனை வரும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை நேரமில்லை| என்பதாகும். இருப்பினும் பல சோதனைகளுக்கு மத்தியில் வாழ்க்கையில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டோருக்கு இது ஒரு பிரச்சினையாகத் தென்படுவதில்லை.

காலம் பொன்னானது|| என்ற பழமொழி உண்மையில் ஒரு போலியான கூற்றாகும். ~~காலம் பொன்னைவிட மேலானது என்பதே மிகச் சரியான கூற்றாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. காரணம் பொன், தொலைந்து விட்டால் என்ன விலை கொடுத்தாவது வாங்க முடியும். காலம் கடந்து விட்டால் அதைத் திரும்பப் பெறுவதென்பது சாத்தியமான தாகும்.

இளம் பராயத்தினர் தமக்குக் கிடைக்கும் விலைமதிப்பற்ற சொத்தான நேரத்தைப் பிரயோசனமாகக் கழிப்பது மிக வசியமான விடயம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. காலத்தை கவனயீனமாகக் கழித்துவிட்டு பின்னர் கண்கலங்குவதில் பயனேதுமில்லை. எனவேதான் பல வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் பல சாதனை களை நிலைநாட்ட நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்வது இன்றயமையாதது.

அதிக வேலைப்பளுக்களுக்கு மத்தியில் உள்ள ஒருவர் ஏதாவதுதொரு துறையில் குறித்த காலத்தினுள் துறைசார் நிபுணராக அல்லது அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவராக மாற வேண்டும் என விரும்பினால் அதற்கு மிகவும் இலகுவான வழி தினமும் ஒரு மணித்தியாலத்தைக் குறித்த விடயத்திற் காகச் செலவிடுவதாகும். இவ்வாறு திட்டமிட்டு நேரம் செலவிடப்படுமெனில் மூன்றே மூன்று வருடங்களில் ஒருவர் தான் விரும்பிய துறையில் சாதனை வீரனக மாறலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பிட்ட விடயத்தைக் கற்பதற்கு தினம் ஒரு மணித்தியாலத்தை ஒதுக்கினால் அவர் அதில் நிபுணத்துவம் வாய்ந்தவரக மாறுவார் என்பதற்கு சிழியி ஹிஷ்ஆஜுமிஷ்ஐஆழியி முன்னுதாணமாவார்.

இன்று ஆங்கில மொழி, உலகளவில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. தொழில் வாய்ப்புகளைப் பெறுவதாயினும் வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர்வதென்றாலும் ஆங்கில மொழி மிகப்பிரதானமாகும். தற்கால சூழலில் உள்நாட்டில் தரம் வாய்ந்த ஒரு கற்கை நெறியைத் தொடர்வதென்றாலும் ஆங்கிலம் அத்தியவசியமானதாகும்.

சமகால சூழலில் ஒரு மாணவன் தனது ஆங்கில மொழிப்புலமையை அதிகரித்துக்கொள்ள ~தினமும் ஒரு மணித்தியாலம்| என்ற திட்டத்தைப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒரு மொழியில் தேர்ச்சி பெற குறிப்பிட்ட மொழியின் இலக்கணம் (புசயஅஅயச) தெரிந்திருக்க வேண்டும். அதிகமான சொற்களுடன் பரிச்சயமாக இருப்பது அதைவிட முக்கியம். எனவே, ஒருவர் தனது சொல் வளத்தைப் பெருக்கிக் கொள்ள (ஏழஉயடிரடயசல டீரடைனiபெ) ஒரு நாளைக்கு ஒரு மணித் தியாலத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

இதற்காகச் செய்யவேண்டியதெல்லாம், ஓர் ஆங்கில-தமிழ் அல்லது ஆங்கில-ஆங்கில (English to English) அகராதியுடன் ஞாயிறு தினங்களில் ளுரனெயல ழுடிளநசஎநச நாளிதழுடன் வரக்கூடிய துரnழைச ழுடிளநசஎநச எனும் சஞ்சிகை அல்லது சிறிய ஆங்கிலக் கதைப் புத்தகம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்வதுதான். அச்சஞ்சிகையில் அல்லது கதை நூலில் இடம் பெற்றுள்ள சொற்களை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு அதற்கான கருத்தை அகராதியில் தேடி அதையும் எழுதிக்கொண்டதன் பிறகு அச்சொற்களுடன் பரிச்சயம் பெற முயற்சித்தல் வேண்டும்.

இதன் மூலம் சாதாரணமாக 50 ஆயிரம் சொற்களைக் கொண்ட ஓர் அகராதியில் இருக்கக் கூடிய அச்சொற்களுக்கான வரைவிலக்கணம், உச்சரிப்பு முறை என்பவற்றோடு சிறந்த பரிச்சயத்தை இரண்டே வருடங்களில் உருவாக்கிக் கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான மாணவர் கள் 11 வருடங்கள் பாடசாலையிலும் பிரத்தியேக வகுப்புகளிலும் ஆங்கிலத்தைப் படித்த போதிலும் புலமையைப்பெறத் தவறுகின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலத்தை ஒதுக்கி சுய கற்றலில் ஈடுபட்டால் நிச்சயமாக அது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற் படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இவ்வுலக வாழ்க்கையின் சோலிகளுக்குள் (Busy) சிக்கித் தவிக்கும் மாணவர்கள் ஈருலக விமோசனத்திற்கும், வெற்றிக்கும் வழி சமைக்கும் இஸ்லாத்தைப் படித்து அதில் குறிப்பிட்டளவு பாண்டித்தியத்தைப் பெறுவதற்கும் ~தினம் ஒரு மணித்தியாலம்| என்ற திட்டம் உறுதுணையாக அமைகிறது என நவீன கால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் மௌலானா மௌதூதி அவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்க்கையில் பின்பற்றத் தேவையானளவு கற்றுத் தேர்ச்சி பெற 6 அல்லது 8 வருடங்கள் மத்ரஸாக்களில் கற்க வேண்டுமென்பதல்ல. அரபுக் கல்லூரிகளில் கற்கும் பேற்றை இழந்தவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம்| எனும் திட்டத்தை பின்பற்றி இஸ்லாமிய நூல்களை வாசித்தல் போதுமானது

இன்று இஸ்லாத்தை விளங்கிக் கொள்வதற்கு வழிகாட்டுகின்ற எத்தனையோ நூல்கள் தமிழில் வந்துள்ளன. அதுபோல் சீடிக்கள், ஒலி நாடாக்கள் என்பவற்றையும் குறிப்பிட முடியும். வற்றை ஒருநாளைக்கு ஒரு மணித்தியாலம் வீதம் செலவு செய்து இஸ்லாத்தை விளங்க முயற்சித்தால் குறிப்பிடத்தக்களவு இஸ்லாம் பற்றிய அறிவை ஒரு மாணவனால் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக் குள் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன், இன்ஷா ல்லாஹ்.
எனவே, பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நாம் டைய விரும்பும் ஒரு விடயத்தைச் சாதித்துக் கொள்ள ~தினமும் ஒரு மணித்தியாலம் என்ற திட்டத்தை முல்படுத்த முயற்சிப்போம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எமது வகிபாகம்?


எம்மைச் சுற்றி நாளாந்தம் எத்தனையோ நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவை யாவற்றையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையோஇ கடமைப்பாடோ யாருக்குமில்லை. ஆனால் இப்பூகோளக் கிராமத்தில் நடக்கின்ற இந்த விடயங்கள் முழு மனித சமூகத்தின் அமைதியையும் ஆட்டங்காணச் செய்யக் கூடியனவாக அமையுமாயின் அதற்கெதிராகக் குரல் எழுப்ப வேண்டியது மனிதமுள்ள அனைவரினதும் கடமைப்பாடாகும். குறிப்பாக உலகத்தில் சாந்தியையும் அமைதியையும் நிலை நாட்ட வந்த தூய இஸ்லாத்தைப் பினபற்றுகின்ற முஸ்லிம்களுக்கு இது ஒரு பணியாகும். முழு மனித சமூகத்திலும் அமைதியை ஏற்படுத்தி அவர்களை நெருக்கடியானதும் அடிமைத்தனமும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையிலிருந்து மீட்டு சுதந்திரமானதும் விசாலமிக்கதுமான வாழ்க்கையின் பால் வழிகாட்டுவது அல்குர்ஆனையும் சுன்னாவையும் சுமந்து, நான் ஒரு முஸ்லிம் என்று மார் தட்டுகின்ற அனைவரினதும் கடமைப்பாடாகும். இத்தகைய பொறுப்பபைச் சுமந்த முஸ்லிம்கள் முழு உலகிலும் என்ன நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்வது ஒரு புறமிருக்க முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாமல் இருப்பதுதான் ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாகும். சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னால் நீதிமன்றத்தில்…. நீதிபதிகள் வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க….. அன்புக்கணவனுக்கும் மூன்றே வயது நிரம்பிய பாசமிகு மகனுக்கும் முன்னால் மர்வா அல் ஷெர்பினி என்ற மூன்று மாதக் கற்பினித்தாய் தான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் தனக்கும் தனது மார்க்கத்துக்கும் இழிவு தரும் வகையில் நடந்து கொண்ட மனிதமற்ற ஒருவனுக்கெதிராக நீதி தேடிச் சென்றதற்காய் பல தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான ஒரு சம்பவம் ஜேர்மனியில் இடம் பெற்றிருக்கிறது. இது தொடர்பில் பிரபல்யமான எந்தவொரு செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை. இதைக் கண்டித்து எந்தவொரு இஸ்லாமிய அமைப்பும் கண்டனம் தெரிவித்ததாக இதுவரை அறியப்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யார் முஸ்லிம்களின் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ அவர் அவர்களைச் சார்ந்தவர் அல்ல” இன்னுமொரு இடத்தில் “பரஸ்பரம் அன்பு செலுத்துவதிலும் கருனை காட்டுவதிலும் முஸ்லிம்கள் ஒரு உடலுக்கு ஒப்பானவர்கள். அதன் ஒரு உறுப்பு நோவினைப்பட்டால் அதற்காக எனைய உறுப்புக்களும் காய்ச்சலைக் கொண்டும் இரவில் விழித்திருப்பதைக் கொண்டும் தமது வருத்தத்தை வெ ளிப்படுத்தும்.” ஆக முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டிலும் சரி வெளி நாடுகளிலும் சரி அநீதம் இழைக்கப்படும்போது அதில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கெதிராகக் குரல் கொடுத்து அவர்களின் துக்கத்திலும் போராட்டத்திலும் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்களும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என நெஞ்சை நிமிர்த்திக் கூற முடியும் என்பதை இந்த நபி மொழிகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் எங்கிருந்தாலும் சரி என்ன தொழில் புரிந்தாலும் சரி எமக்குக் கிடைக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் விவகாரம் குறித்துக் கவனம் செலுத்துவது இந்நாட்களின் கட்டாயத் தேவையாவுள்ளது என்பதை மனதில் வைத்துச் செயற்பட முற்படுவோம். ஹனீபா ஏ வஹாப்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸகாத்துல் ஃபித்ர் (ஈகை வரி)



ஸகாதுல் பித்ர் இபாதத்களில் ஒன்றாகவும் அல்லாஹ்வை நெருங்கக் கூடிய வழிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அல்லாஹ் தன்னோடு இணைத்துக் கூறிய வணக்கமான நோன்புடன் இணைந்துள்ள ஒர் வணக்கமும் கூட. அல்லாஹ் நோன்பு பற்றிக் கூறும்போது “நோன்பு எனக்குரியது நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்” என்று கூறுகிறான்.



சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்.



ஸகாதுல் பித்ர், ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமளான் மாதம் நோன்புப் பெருநாளைக்கு இரு தினங்களுக்கு முன் கடமையாக்கப் பட்ட ஒரு வணக்கமாகும். இது பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரவான், ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)அவர்கள் ஸகாதுல் பித்ர் கடமையானவர், ஸகாதின் நிஸாபை அடைந்தவராகவும் தனது வீடு, வாகனம், பாதுகாப்புத் தேவை என்பன பூர்த்தியான வராகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர்களுக்குமான உணவுத் தேவை போக மீதமாக உள்ளவர் கொடுக்க வேண்டும் என்ற கருத்தே பொதுவாக ஏற்றுக்க கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்னு உமர் (ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பு முன்வைக்கப்படுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ ஈத்தம் பழம் அல்லது ஒரு ஸாஃ பார்லி விதை போன்றவற்றிலிருந்து கொடுக்குமாறு முஸ்லிம்களிலுள்ள அடிமைகள், சுதந்திரவான்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவர்மீதும் விதியாக்கினார்கள்”. ஆதனை மனிதர்கள் தொழுகைக்குப் போக முன்னர் பொடுப்பதுதான் அதிகம் கூலி கிடைக்கக் கூடியது ( புகாரி, முஸ்லிம்)



ஸகாதுல் பித்ர் இஸ்லாமிய ஷரியாவில் உள்ள ஒன்று என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளா விடினும் அதன் சட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாமறிந்ததே.

யாருக்காகக் கொடுப்பது?
தனக்காகவும் தனது பொறுப்பின் கீழுள்ள தனது குடும்பம், மனைவி, பணியாளர்கள் ஆகியோருக்கும் கொடுக்க வேண்டும். மனைவிக்குக் கொடுப்பது கடமையில்லை என இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகின்ற போதிலும் “ நீங்கள் ஸகாதுல் பித்ரை நீங்கள் உணவளிப்போருக்குக் கொடுங்கள்” என தாருக் குத்னியில் ஒரு அறிவிப்புப் பதிவாகியுள்ளது. இதன் பிரகாரம் மனைவிக்காகவும் கொடுப்பது கடமையானது என இமாம்கள் கூறுகின்றனர்.

யாருக்குக் கொடுப்பது?
ஷாபி மத்ஹபின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஸகாத் பெறத்தகுதி பெற்ற எட்டுக் கூட்டத்தினருகு;கும் கொடுக்கப்பட முடியும். ஏனைய மூன்று இமாம் களும் ஒரு ஏழைக்குக் கொடுப்பதே சிறந்தது என்கின்றனர். அதேபோல் ஜமாதாக இணைந்து ஒரு ஏழைக்குக் கொடுப்பதுதையும் ஆகுமாக்குகின்றனர். இக்கருத்தோடு ஷாபிஈ மத்ஹப்பைச் சேர்ந்த சிலர் இமாம்களும் உடன்படுகின்றனர்.
ஸகாதுல் பித்ர் கூட்டாகக் கொடுப்பது மிக வரவேற்கத்தக்க அமசமாகும். ஸகாத் வஸ_லிக்கப்பட்டு பொருத்தமானவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுபோல் இதையும் அறவிட்டு உணவுப் பொதிகளாகத் தயாரித்து, Nதைவை உடையவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமாயின் ஒரு வருக்கு இரு முறை கிடைக்கும் சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டு, தேவையுடையவர்கள் அனைவருக்கும் ஸகாதுல் பித்ர் கிடைப்பதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.

அதேபோல் பாட்டன் பாட்டி, பேரன்கள் போன்ற செலவு செலவழிப்பதற்குக் கடமையற்றோருக்குக் கொடுக்கலாம் என்றும் கூறுகின்றனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் சகோதரன்,சாச்சா, மாமி உறவிலுள்ளோர்களுக்குக் கொடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ள அதேவேளை, இமாம் மாலிக், இமாம் ஷபிஈ ஆகியோர் இது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எவ்வாறாயினும் காபிர்களுக்குக் கொடுக்கப்படக் கூடாது.

ஸகாதுல் பித்ராவை ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்துவதில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) – நெருங்கிய உறவினர் இருந்தால் அல்லது தனது பிரதேசத்தை விட அடுத்த பிரதேசம் அதிக தேவையுடயதாக இருந்தால் நகர்த்தலாம். வேறு சந்தர்ப்பங்களில் நகர்த்துவது மக்ரூஹ்
இமாம் மாலிக் - இமாமின் முடிவின்றி நகர்த்தக் கூடாது.
இமாம் ஷபிஈ - இவரின் பிரபல்யமான கருத்து நகர்த்தக் கூடாது.
இமாம் ஹன்பல் - பிரதேசத்தில் தேவையுடயோர் இருக்க கஸ்ரு செய்யும் அளவுகூட நகர்த்தக் கூடாது.

இதிலிருந்து அவதானிக்கக் கூடிய விடயம் ஏதாவது அதிமுக்கிய சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நகர்த்தக் கூடாது என்பதாகும்.

கொடுக்கப்படும் நேரம்?
பெருநாள் தினத்தன்று பஜ்ருக்குப் பின்னர், பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும். எனினும் பெருநாளைக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொடுப்பதும் ஆகுமானது என்னற கருத்தும் காணப்படுகிறது. புகாரியில் வருகின்ற ஒரு அறிவிப்பு “ நபி (ஸல்) அவர்கள் பெரு நாளைக்கு ஒரு தினத்திற்கு முன்னர் அல்லது இரு தினங்களுகு;கு முன்னர் கொடுப்பவராக இருந்தார்கள் என வந்துள்ளது”. அனால் தொழுகைக்குப் பின் கொடுப்பது தடுக்கப்பட்ட தாகும்.
அளவும் கொடுக்கப்படும் பொருளும் ?
கோதுமை, பார்லி, அரிசி, ஈத்தம்பழம், காய்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி ஆகிய ஐந்து உணவுப் பொருட்களும் உணவாகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்தில் இவற்றிலிருந்து ஸகாதுல் பித்ர் கொடுக்கலாம் என அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இமாம் ஷாபிஈ அவர்கள் அரிசி.கோதுமை, தானியம் போன்ற உணவுக்காகப் பயன்படுத்தும் அனைத்திலிருந்தும் கொடுக்கப்பட முடியும் எனக் கருதுகிறார்.
அதேவேளை ஸகாதுல் பித்ராவின் பெறுமதியை நாணமாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா ( அவர்கள் ) கொண்டுள்ளார். இதே கருத்தை பிப்பட்ட கால ஷாபிஈ மத்ஹப்பைச் சோந்த அறிஞர்களும் கொண்டுள்ளனர்.

இதன் அளவப் பொறுத்தவரை ஹதீஸில் ஒரு ஷாஃ என்று வந்துள்ளதை அவதானிக்கலாம். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட ஐந்து வகையான பொருட்களிலும் ஒரு ஷாஃ கொடுப்பது கடமையாகும். ஒரு ஷாஃ என்பது நவீன அளவியலின் படி எவ்வளவு என்பது இன்று அனைவரின் மத்தியிலும் உள்ள கேள்வியாகும். ஆதைப் பின்வருமாறு அவதானிக்கலாம்.

ஒரு ஷாஃ கோதுமை 2.176kg
ஒரு ஷாஃ அரிசி 2.520kg
ஒரு ஷாஃ பருப்பு 2.185kg
ஒரு ஷாஃ பார்லி 2.250kg

எவ்வாறாயினும் 2.5 kg அல்லது அதைவிடக் கூடுதலான பெறுமதியான உணவுப் பொருளையோ அல்லது அதற்கு நிகரான பணப் பெறுமதியையோ வழங்குவது சிறந்ததாகக் காணப்படுகிறது.

கடமையாக்கப்பட்டதன் பின்னணியும் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும்.
1. நோன்பில் தெரியாமல் நிகழ்த தவற்ருகளைச் நீக்குவதற்காகக் கடமையாக்கப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியை கேளிக்கைகள், தவறான வார்த்தைகள் என்பவற்றிலிருந்து தூமைப்படுத்தும் வகையில் ஸகாதுல் பித்ராவைக் கடமையாக்கினார்கள’

2. ஏழைகள், மிஸ்கீன்களுக்கு அந்நாளின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக அமைகிறது.
அந்நாளில் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கையேந்துகின்ற ஏழைகள், மிஸ்கீன்கள் என்போர் ஏனைய முஸ்லிம்கள் போல் சந்தோசமாக தமது பெருநாளைக் களிக்க இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.

3. நோன்பு அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது.
ஜரீர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘ரஸல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ரமளானின் நோன்பு வானுக்கும் பூமிக்குமிடையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஸகாதுல் பித்ரின் மூலம் தான் உயர்த்ப்படுகிறது”.
4. நோன்பல்லாத காலங்களிலும் வாரி வழங்கக் கூடிய சிந்தனையையும் பயிற்சியையும் இது ஏற்படுத்துகிறது.எனவே நோன்பில் கடமையாக்கப்பட்ட ஸகாதுல் பித்ரா என்ற கடமையை உரிய முறையில் நிறை வேற்றுவதனூடாக அல்லாஹ்வின் கட்டளையையும் அவனின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றியவர்களாகவும் இறைதிருப்தியைப் பெற்று நாளை மறுமையில் எல்லோரும் அவாக் கொண்டுள்ள சுவனத்தை அடைய எம்மை எதிர்நோக்கும் ரமளானில் முயற்சிப்போம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஞாபக மறதியா? அது ஒரு பிரச்சினையே அல்ல……

மாணவர்களிடம் பொதுவாக நீங்கள் எதிர்நோக்குகின்ற அல்லது படிப்பதில் உங்களுக்குத்தடையாக இருக்கின்ற காரணி அல்லது பிரச்சினை என்னவென்று வினவினால் ஒரு சில விதிவிலக்கான மாணவர்களைத் தவிர ஏனைய எல்லா மாணவர்களும் சொல்லக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை அல்லது காரணி ஞாபக மறதி என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

உண்மைதான், ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக் கூடிய பொதுப் பிரச்சினையாக இன்று எல்லோராலும் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.

ஆனால் ஞாபக மறதி என்பது ஒரு பிரச்சினையே அல்ல, உண்மையான பிரச்சினை யாதெனில் தேவையான விடயம் மறந்துவிடுவதும் தேவையற்ற அல்லது தேவை குறைந்த விடயம் அதிகம் ஞாபகத்தில் இருப்பதுமாகும். பொது வாக ஞாபக மறதி என்பது அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அருளிய அருட்கொடை என்பதே எனது கருத்தாகும். அப்படி இல்லை என்றால் உலகில் மனநோயாளிகளின் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவு அதிகரித்திருக்கும் என்பதே பேருண்மையாகும்.

ரி! குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுவாக யாவருக்கும் பிரச்சினையாகக் கருதப்படுகின்ற ஞாபக மறதி என்ற விடயத்தை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை விஞ்ஞான ஆய்வு மற்றும் சில அனுபவக் குறிப்புகள் என்பவற்றினூடாக இங்கு நோக்குவோம்.

ஞாபகம் எவ்வாறு உருவாகிறது?

கண், காது தோல் போன்ற எமது புலன்களால் ஒரு தகவலைப் பெறும்போது அங்கு ஒரு வகையான ஞாபகம் உருவகிறது.

இது உடனடி ஞாபகம் (Immediate memory)

என்று அழைக்கப்படுகிறது இத்தவலைப் பெற்றதும் அதற்கேற்ப ஒரு ஒரு வேலை நடை பெறும். இந்த வேலை இடம் பெறும் போது காணப்படக் கூடிய ஞாபகத்தை இயங்கும் ஞாபகம் (Working Memory) என்று அழைக்கப்படுகிறது. இதைக் ‘குறுநேர ஞாபகம் (Short term Memory) என்றும் அழைப்பர். இக்குறுநேர அல்லது இயங்கும் ஞாபகத்தைச் சில தொழிற்பாடுகளினூடாக ஒன்றிணைக்கின்ற போது தேற்றம் பெறுகின்ற ஞாபகம் நெடுங்கால ஞாபகம் (Long term Memory) என்று அழைக்கப்படுகிறது.

ஞாபகம் உருவாகின்ற இச்செயன்முறைக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் உங்களது நெருங்கிய நண்பனின் தொலை பேசி இலக்கம் உங்களது மனதில் ஞாபகமாகப் பதியும் செயன்முறையைக் குறிப்பிடலாம். முதன் முதலில் உங்களுடைய நண்பனின் தொலைபேசி இலக்கத்தைப் பார்க்கும் போது ஏற்படும் உடனடியாக ஏற்படும் Memory புலனுணர்வு ஞாபகம் (Sensery Memory) என்றும் அவ்விலக்கத்தைச் சுழற்றும் போது ஏற்படும் Memory Working memory என்றும் அவ்விலக்கத்தைத் பல தடவைகள் தொடர்ந்தும் பயன் படுத்தும் போது ஆழ்மனதில் அழியாத வண்ணம் பதிகின்ற MemoryLong term Memory என்றும் அழைக்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆநஅழசல யைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் :

1) புலனுணர்வு ஞாபகம் - (Sensory Memory) :

இவ்வாறு கிடைக்கின்ற தகவல் ஒன்று முதல் நான்கு வினாடிகள் மாத்திரமே ஞாபகத்தில் காணப்படும்.

2) குறுகிய கால ஞாபகம் - (Shortdem Memory) :

இவ்வாறு கிடைக்கின்ற தகவல் 20 வினாடிகளுக்கு மாத்திரம் ஞாபகத்தில் இருக்கும்.

3) நீண்ட கால ஞாபகம் (Long term Memory):

இவ்வாறு கிடைக்கப் பெறும் தகவல், என்றும் ஆழ் மனதில் நீண்ட காலத்திற்குக் காணப்படக் கூடியதாகும். சில போது மறந்தாற்போல்

காணப்பட்டாலும் இலேசான மீட்டலின் போது மீண்டும் உடனே ஞாபகத்தில் வரக்கூடியதாகக் காணப்படுகிறது.

4) நிழல்ப்பட ஞாபகம் (Photographic Memory):

இது, சம்பவம், ஒலி, காட்சிகள் என்பன போன்றவற்றை ஞாபகத்தில் இருத்திக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஊதாரணமாக வாகன விபத்தைப் பார்க்கின்ற ஒருவருக்கு அக்காட்சிகள் மனதில் பதிந்து விடுகிறது, எப்போதாவது அவ்விபத்து பற்றி ஞாபகப்படுத்தப் படுகின்ற போது அக்காட்சி அவரின் மனத்திரைக்கு முன்னால் வந்துவிடுகின்றது. இத்தகைய Memory யே Photographic Memory என்றழைக்கப்படுகின்றது. இந்த Memory யைப்பயன்படுத்தி இந்தியவைச் சேர்ந்த தத்துவ வியலாளரான சுவாமி விவாகனந்தர் Encyclpedia வின் பத்து வொல்யூம்களை மிகக் குறுகியகாலத்தினுள் வெறும் அவதானத்தினூடாக (Observation) மனனம் செய்தாரென்று கூறப்படுகிறது. எனினும் இக்காரியம் விதிவிலக்கான வெகு சிலரால் மாத்திரமே நிகழ்த்தப்பட முடியும் என்று உளவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கற்கும்போது எவ்வாறு ஞாபகம் உருவாகிறது ?

Memory இன் உருவாக்கத்தை இவ்வாறு பொதுவாகச் சொல்ல முடியுமானாலும் மாணவர்கள் படிக்கின்ற போது ஞாபகம் எவ்வாறு உருவாகி ஆழ்மனதில் பதிகிறது என்பதை சற்றுத் தனியா நோக்குவது மிகப் பொருத்தமானது.

ஒரு மாணவன் படிக்கின்றபோது பின்வரும் மூன்று செயன்முறைகள் இடம்பெறுகின்றன

  • * Learning Or Encoding தகவல்களை மனதில் பதித்தல்
  • * Encoding சேமித்து வைத்தல்
  • * Recalling / Remember ஞாபகமீட்டல்

இச்செயன்முறையை பின்வரும் குற்றிப்படத்தின் மூலம் நோக்கலாம்

ஓரு மாணவன் படிக்கின்ற போது முதலில் அது Short term Memory யில் பதிகிறது. இவ்வாறு பதிகின்ற தகவல்கள் பயிற்சிகள் மற்றும் மீட்டல் என்பற்றின் மூலம் ஆழ்மனதில் பதிகின்றன. இங்கு சேமிக்கப்படுகின்ற தகவல்கள் தேவையான சந்தர்ப்பங்களில் மீட்டப்படுகின்ற போதெல்லாம் அது மீண்டும் Working Memory ஆகத் தொழிற்பட்டு பிரயோசனமளிக்கிறது. டுழபெ வநசஅ ஆநஅழஅழசல க்கு அனுப்பப்டாத தகவல்களில் 65% இற்கும் அதிகமானவை படித்த அன்றே மறந்து விடுவிகின்றன என்பது மாணவர்களைப் பொறுத்தவரை கசப்பான தோர் உண்மையாகும்.

படிக்கின்ற ஒரு விடயத்தை எவ்வாறு Long term Memory க்கு அனுப்புவது?

அது ஒன்றும் Magic அல்ல, இதற்குத் தேவையானதெல்லாம் சிறியதொரு சுய முயற்சி மாத்திரமே. ஒரு வருக்கு பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கின்றது என வைத்துக் கொண்டால் அவர்களுள் ஒரு சிலரின் தொலை பேசி இலக்கங்கள் மாத்திரமே ஞாபகத்தில் நிற்கின்றன, ஏன்....? காரணம் அந்த இலக்கங்கள் மாத்திரமே அடிக்கடி சுழற்றப்படக் கூடியதாக இருப்பதாகும். இது போலவே, ஒவ்வொரு நாளும் படிக்கின்ற விடயங்களை அன்றே இரண்டுக்கு மூன்று தடைவகள் மீட்டுகின்ற போது அத்தகவல்கள் Short term Memory யிலிந்து Long term Memory க்கு அனுப்பப் படுகின்றன. பரீட்சைகளின்போது அல்லது வேறு தேவைகளின் போது சாதரண ஒரு மீட்டல் செய்கின்ற மாத்திரத்தில் இவை மீண்டும் ஞாபகத்தறிக்கு வந்து விடுகின்றன.

தேவையான விடயங்கள் ஏன் ஞாபகத்தில் நிற்பதில்லை?

ஒரு நாள் ரிஸான் என்ற மாணவன் தனது நண்பனை நோக்கி…“ அக்ரம்! சினிமாப் பாட்டு, இந்த நாடகம், சினிமாப்படம் ஞாபகமி நிற்கிற மாதிரி படிக்கிற ஒன்னுமே ஞாபகத்துக்கு வரமாட்டிங்குதுஉனக்கு ஏதாவது காரணம் தெரியுமா?” என்று வினவினான். உண்மையில் இது ரிஸானுக்கு மாத்திரமுள்ள பிரச்சினையல்ல ரிஸானைப் போன்ற பல மாணவர்களும் அடிக்கடி உச்சரிக்கின்ற ஒரு பிரச்சினையாகும். இதற்குக் காரணம் இல்லாமலில்லை.

ஒருவர் படிக்கின்ற வழிமுறைகளுக் கேற்ப அவரின் மனதில் பதிகின்ற விடயங்களின் வீதமும் வேறுபடுகின்றதாக ஆய்கள் சுட்டிக்காட்டுகின்றன. பின் வருமாறு அது அமைகிறது.

ஒரு விடயத்தை……

வாசிப்பதினூடாக 10%

செவிமடுப்பதினூடாக 20%

பார்ப்பதினூடாக 30%

பார்ப்பதோடு செவிமடுப்பதினூடாக 50%

பிறருடன் கலந்துரையாடுவதினூடாக 70%

அவ்விடயத்தை சுயமாக அனுபவிப்பதினூடாக 80%

பிறிதொருவருக்குக் கற்றுக்கொடுப்பதினூடாக 95%

மும் ஞாபகத்தில் பதிகின்றன.

இதனடிப்படையில் நோக்கும்போது ஒரு மாணவன் இவ்வழிமுறைகளைப் பயன் படுத்தும் போதுதான் படிக்கின்ற விடயங்களில் அதிகமானவை ஞாபகத்தில் பதிகின்றன என்பது தெளிவான உண்மையாகும்.

ரிஸான் போன்ற பெரும்பாலான மாணவர்களுக்கு நடப்பெதென்ன வெனில், பாடத்தை மீட்டுகின்றோம் என்ற பெயரில் பாடப்புத்தகத்தையோ, அல்லது ஆசிரியரின் பாடக் குறிப்பையோ வாசித்து விட்டு அல்லது பிறர் வாசிப்பதகைக் கேட்டுவிட்டு அல்லது தானே அக்குறிப்புகக்களை தன் கண்களால் பார்த்தவாறே உரத்த குரலில் வாசித்து விட்டு தான் பாடத்தை மீட்டிவிட்தாக முடிவு செய்கின்றனர். ஆனால் படிப்பதற்கென இங்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளினூடாகவும் அவரின் ஞாபகத்தில் பதியக்கூடிய அதி கூடிய அளவு 60%மாத்திரமே. ஏனைய 40 வீதமானவையும் மறந்து விடுகின்றன. மறு புறம் நாடகம், திரைப்படம், சினிமாப்பாட்டு, ஆபாசக் காட்சிகைகள் நிரம்பிய சஞ்சிகைகள் மற்றும் சம்பவங்கள் என்வற்றைப் கண்களால் பார்த்து, காதினால் செவிமடுப்பதோடு நின்று விடாது சக நண்பனேடோடு அவ்விடயங்களைக் கலந்துரையாடுகின்ற செற்பாடும் நடைபெறுகிறது. சில போது தான் அனுபவித்த விடயங்களை தனது நண்பனுக்கும் கற்றுக் கொடுக்கின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

விளைவாக படித்தவற்றில் 60% ஞாபகத்தில் பதிகின்ற அதே வேளை, ஒரு மாணவனுக்குப் பொருத்தமற்ற, அசிங்கமான விடயங்கள் 95% மனதில் பதிகின்றன. அத்தோடு ஏலவே படித்த விடயங்களையும் கூட ஞாபகத்திற்கு வரவிடாமல் தடுக்கின்ற ஒரு வேலையையும் இம்மோசமன விடயங்கள் செய்கின்றன. இதன் விளைவே ரிஸான் போன்ற மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும்.

என்ன செய்யலாம்?

தேவையற்ற விடயங்கள் ஞாபசக்தியை ஆழவிடது படித்த விடயங்களில் 95% மானவற்றை மனதில் பதித்துக் கொள்ள ஆர்வமுள்ள மாணவச் செல்வங்களுக்குச் சில துணுக்குகள்……

எப்போதும் இறை சிந்தனையில் நிலைத்திருங்கள், இது மோசமான விடயங்களில் ஈடுபடுவதை விட்டும் ஒருவரைத் தடுப்பதோடு இறை அன்பையும் அவனது அருளையும் பெற்றுத் தருவதற்கு வழியாக அமைகிறது.

எப்போதும் ளுநடக ளவரனல என்று அறையில் அடங்கிக் கிடக்காது கற்பதில் திறமையும் ஒழுக்கத்தில் முழுமையும் கொண்ட சக வகுப்பு மாணவர்களோனோடு இணைந்து படிக்க முற்படுங்கள். இதன்போது குழுக்கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அதே வேளை தனக்குத் தெரிந்த ஒன்றை அது பற்றித் தெரியாத சக நண்பனுக்கு கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள்.

ஆபாசம் நிறைந்த காட்சிகளைப் பார்த்தல், மோசமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய சஞ்சிகைகளை வாசித்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருக்க பிரயத்தனங்களை மேற்கொள்ளுங்கள். மிகப் பிரபலமான நான்கு இமாம்களுள் ஒருவரான இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூட ஒரு முறை தனது ஆசானிடம் தனது மனன சக்தியின் மோசமான நிலை பற்றி முறையிட்டார்கள்;. அதற்கு அவரின் ஆசான் கூறிய பரிகாரம் என்ன தெரியுமா? ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதை விட்டும் தவிர்ந்திருங்கள் என்பதாகும். இத்தனைக்கும் இமாம் ஷாபிஈ அவர்கள் பார்த்தெதெல்லாம் ஒரு பெண்ணின் கரண்டைக் காலுக்குக் கீழ் உள்ள பகுதியையாகும். ஆதற்கே ஞாபக மறதி என்றால் நாங்கள் எவ்வளவு விடயங்களை விட்டும் தூரமாகி இருக்க வேண்டும்? சிந்தியுங்கள்

அதிககோபம், பொறாமை, பொய், புறம் மற்றும் நயவஞ்சகம் போன்ற தீய பண்புகளிலிருந்து தவிர்ந்த உள்ளத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இத்தகைய தீய காரியங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, இவை அதிகமாக ஞாபக மறதியை உண்டுபண்ணக் கூடிய காரணிகளாகக் காணப்படுவதாக சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

அதிக நேசத்துக்குரிய ஒரு விடயம் வெகு இலகுவில் மறப்பதில்லை. மேலும் அதிக விருப்புக்குரிய ஒன்றின் மீதான கரிசனையும் அதில் காட்டுகின்ற ஈடுபாடும் ஏனை வற்றை விட அதிகமாகவே காணப்படும். எனவே கல்வியை நேசியுங்கள் அது கடைசி வரை உங்களோடு தோழமை கொள்ளும்.

இறுதியாக! எதைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் நிறைவேற்றுங்கள், அதில்தான் சகல விடயங்களுக்குமானமான உண்மையான வெற்றி காணப்படுகின்றது.

எமது நேரத்தையும் தொடர் விடா முயற்சியையும் நாம் அடைய விரும்பும் ஒன்றில் முயற்சித்தால் வெற்றி என்பது வெகு தூரத்தில் இல்லை.

Home

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS