எமது வகிபாகம்?
ஸகாத்துல் ஃபித்ர் (ஈகை வரி)
சட்ட அந்தஸ்தும் அது கடமையானோரும்.
ஸகாதுல் பித்ர், ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமளான் மாதம் நோன்புப் பெருநாளைக்கு இரு தினங்களுக்கு முன் கடமையாக்கப் பட்ட ஒரு வணக்கமாகும். இது பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரவான், ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)அவர்கள் ஸகாதுல் பித்ர் கடமையானவர், ஸகாதின் நிஸாபை அடைந்தவராகவும் தனது வீடு, வாகனம், பாதுகாப்புத் தேவை என்பன பூர்த்தியான வராகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் பெருநாள் தினத்தன்று தனக்கும் தனது பொறுப்பிலுள்ளவர்களுக்குமான உணவுத் தேவை போக மீதமாக உள்ளவர் கொடுக்க வேண்டும் என்ற கருத்தே பொதுவாக ஏற்றுக்க கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இப்னு உமர் (ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பு முன்வைக்கப்படுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ ஈத்தம் பழம் அல்லது ஒரு ஸாஃ பார்லி விதை போன்றவற்றிலிருந்து கொடுக்குமாறு முஸ்லிம்களிலுள்ள அடிமைகள், சுதந்திரவான்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவர்மீதும் விதியாக்கினார்கள்”. ஆதனை மனிதர்கள் தொழுகைக்குப் போக முன்னர் பொடுப்பதுதான் அதிகம் கூலி கிடைக்கக் கூடியது ( புகாரி, முஸ்லிம்)
ஸகாதுல் பித்ர் இஸ்லாமிய ஷரியாவில் உள்ள ஒன்று என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொள்ளா விடினும் அதன் சட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாமறிந்ததே.
யாருக்காகக் கொடுப்பது?
யாருக்குக் கொடுப்பது?
ஸகாதுல் பித்ர் கூட்டாகக் கொடுப்பது மிக வரவேற்கத்தக்க அமசமாகும். ஸகாத் வஸ_லிக்கப்பட்டு பொருத்தமானவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுபோல் இதையும் அறவிட்டு உணவுப் பொதிகளாகத் தயாரித்து, Nதைவை உடையவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமாயின் ஒரு வருக்கு இரு முறை கிடைக்கும் சந்தர்ப்பம் தவிர்க்கப்பட்டு, தேவையுடையவர்கள் அனைவருக்கும் ஸகாதுல் பித்ர் கிடைப்பதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அதேபோல் பாட்டன் பாட்டி, பேரன்கள் போன்ற செலவு செலவழிப்பதற்குக் கடமையற்றோருக்குக் கொடுக்கலாம் என்றும் கூறுகின்றனர். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் சகோதரன்,சாச்சா, மாமி உறவிலுள்ளோர்களுக்குக் கொடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ள அதேவேளை, இமாம் மாலிக், இமாம் ஷபிஈ ஆகியோர் இது கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எவ்வாறாயினும் காபிர்களுக்குக் கொடுக்கப்படக் கூடாது.
ஸகாதுல் பித்ராவை ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்துவதில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) – நெருங்கிய உறவினர் இருந்தால் அல்லது தனது பிரதேசத்தை விட அடுத்த பிரதேசம் அதிக தேவையுடயதாக இருந்தால் நகர்த்தலாம். வேறு சந்தர்ப்பங்களில் நகர்த்துவது மக்ரூஹ்
இமாம் மாலிக் - இமாமின் முடிவின்றி நகர்த்தக் கூடாது.
இமாம் ஷபிஈ - இவரின் பிரபல்யமான கருத்து நகர்த்தக் கூடாது.
இமாம் ஹன்பல் - பிரதேசத்தில் தேவையுடயோர் இருக்க கஸ்ரு செய்யும் அளவுகூட நகர்த்தக் கூடாது.
இதிலிருந்து அவதானிக்கக் கூடிய விடயம் ஏதாவது அதிமுக்கிய சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நகர்த்தக் கூடாது என்பதாகும்.
கொடுக்கப்படும் நேரம்?
அதேவேளை ஸகாதுல் பித்ராவின் பெறுமதியை நாணமாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா ( அவர்கள் ) கொண்டுள்ளார். இதே கருத்தை பிப்பட்ட கால ஷாபிஈ மத்ஹப்பைச் சோந்த அறிஞர்களும் கொண்டுள்ளனர்.
ஒரு ஷாஃ கோதுமை 2.176kg
ஒரு ஷாஃ அரிசி 2.520kg
ஒரு ஷாஃ பருப்பு 2.185kg
ஒரு ஷாஃ பார்லி 2.250kg
கடமையாக்கப்பட்டதன் பின்னணியும் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியமும்.
1. நோன்பில் தெரியாமல் நிகழ்த தவற்ருகளைச் நீக்குவதற்காகக் கடமையாக்கப்பட்டது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியை கேளிக்கைகள், தவறான வார்த்தைகள் என்பவற்றிலிருந்து தூமைப்படுத்தும் வகையில் ஸகாதுல் பித்ராவைக் கடமையாக்கினார்கள’
2. ஏழைகள், மிஸ்கீன்களுக்கு அந்நாளின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக அமைகிறது.
அந்நாளில் தமது தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கையேந்துகின்ற ஏழைகள், மிஸ்கீன்கள் என்போர் ஏனைய முஸ்லிம்கள் போல் சந்தோசமாக தமது பெருநாளைக் களிக்க இது சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.
3. நோன்பு அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது.
ஜரீர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘ரஸல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள் “ரமளானின் நோன்பு வானுக்கும் பூமிக்குமிடையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஸகாதுல் பித்ரின் மூலம் தான் உயர்த்ப்படுகிறது”.
ஞாபக மறதியா? அது ஒரு பிரச்சினையே அல்ல……
உண்மைதான், ஞாபக மறதி என்பது படிக்கின்ற மாணவர்களிடமும் சரி ஏனையவர்களிடமும் சரி காணப்படக் கூடிய பொதுப் பிரச்சினையாக இன்று எல்லோராலும் அதிகமாகப் பேசப்படுகின்ற ஒரு விடையமாக காணப்படுகின்றது.
ஆனால் ஞாபக மறதி என்பது ஒரு பிரச்சினையே அல்ல, உண்மையான பிரச்சினை யாதெனில் தேவையான விடயம் மறந்துவிடுவதும் தேவையற்ற அல்லது தேவை குறைந்த விடயம் அதிகம் ஞாபகத்தில் இருப்பதுமாகும். பொது வாக ஞாபக மறதி என்பது அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அருளிய அருட்கொடை என்பதே எனது கருத்தாகும். அப்படி இல்லை என்றால் உலகில் மனநோயாளிகளின் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவு அதிகரித்திருக்கும் என்பதே பேருண்மையாகும்.
சரி! குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுவாக யாவருக்கும் பிரச்சினையாகக் கருதப்படுகின்ற ஞாபக மறதி என்ற விடயத்தை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை விஞ்ஞான ஆய்வு மற்றும் சில அனுபவக் குறிப்புகள் என்பவற்றினூடாக இங்கு நோக்குவோம்.
ஞாபகம் எவ்வாறு உருவாகிறது?
கண், காது தோல் போன்ற எமது புலன்களால் ஒரு தகவலைப் பெறும்போது அங்கு ஒரு வகையான ஞாபகம் உருவகிறது.
இது ‘உடனடி ஞாபகம்’ (Immediate memory)
என்று அழைக்கப்படுகிறது இத்தவலைப் பெற்றதும் அதற்கேற்ப ஒரு ஒரு வேலை நடை பெறும். இந்த வேலை இடம் பெறும் போது காணப்படக் கூடிய ஞாபகத்தை ‘இயங்கும் ஞாபகம்’ (Working Memory) என்று அழைக்கப்படுகிறது. இதைக் ‘குறுநேர ஞாபகம்’ (Short term Memory) என்றும் அழைப்பர். இக்குறுநேர அல்லது இயங்கும் ஞாபகத்தைச் சில தொழிற்பாடுகளினூடாக ஒன்றிணைக்கின்ற போது தேற்றம் பெறுகின்ற ஞாபகம் ‘நெடுங்கால ஞாபகம்’ (Long term Memory) என்று அழைக்கப்படுகிறது.
ஞாபகம் உருவாகின்ற இச்செயன்முறைக்கு உதாரணமாகச் சொல்வதென்றால் உங்களது நெருங்கிய நண்பனின் தொலை பேசி இலக்கம் உங்களது மனதில் ஞாபகமாகப் பதியும் செயன்முறையைக் குறிப்பிடலாம். முதன் முதலில் உங்களுடைய நண்பனின் தொலைபேசி இலக்கத்தைப் பார்க்கும் போது ஏற்படும் உடனடியாக ஏற்படும் Memory ‘புலனுணர்வு ஞாபகம்’ (Sensery Memory) என்றும் அவ்விலக்கத்தைச் சுழற்றும் போது ஏற்படும் Memory – Working memory என்றும் அவ்விலக்கத்தைத் பல தடவைகள் தொடர்ந்தும் பயன் படுத்தும் போது ஆழ்மனதில் அழியாத வண்ணம் பதிகின்ற Memory – Long term Memory என்றும் அழைக்கப்படுகிறது.
இதனடிப்படையில் ஆநஅழசல யைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் :
1) புலனுணர்வு ஞாபகம் - (Sensory Memory) :
இவ்வாறு கிடைக்கின்ற தகவல் ஒன்று முதல் நான்கு வினாடிகள் மாத்திரமே ஞாபகத்தில் காணப்படும்.
2) குறுகிய கால ஞாபகம் - (Shortdem Memory) :
இவ்வாறு கிடைக்கின்ற தகவல் 20 வினாடிகளுக்கு மாத்திரம் ஞாபகத்தில் இருக்கும்.
3) நீண்ட கால ஞாபகம் (Long term Memory):
இவ்வாறு கிடைக்கப் பெறும் தகவல், என்றும் ஆழ் மனதில் நீண்ட காலத்திற்குக் காணப்படக் கூடியதாகும். சில போது மறந்தாற்போல்
காணப்பட்டாலும் இலேசான மீட்டலின் போது மீண்டும் உடனே ஞாபகத்தில் வரக்கூடியதாகக் காணப்படுகிறது.
4) நிழல்ப்பட ஞாபகம் (Photographic Memory):
இது, சம்பவம், ஒலி, காட்சிகள் என்பன போன்றவற்றை ஞாபகத்தில் இருத்திக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஊதாரணமாக வாகன விபத்தைப் பார்க்கின்ற ஒருவருக்கு அக்காட்சிகள் மனதில் பதிந்து விடுகிறது, எப்போதாவது அவ்விபத்து பற்றி ஞாபகப்படுத்தப் படுகின்ற போது அக்காட்சி அவரின் மனத்திரைக்கு முன்னால் வந்துவிடுகின்றது. இத்தகைய Memory யே Photographic Memory என்றழைக்கப்படுகின்றது. இந்த Memory யைப்பயன்படுத்தி இந்தியவைச் சேர்ந்த தத்துவ வியலாளரான சுவாமி விவாகனந்தர் Encyclpedia வின் பத்து வொல்யூம்களை மிகக் குறுகியகாலத்தினுள் வெறும் அவதானத்தினூடாக (Observation) மனனம் செய்தாரென்று கூறப்படுகிறது. எனினும் இக்காரியம் விதிவிலக்கான வெகு சிலரால் மாத்திரமே நிகழ்த்தப்பட முடியும் என்று உளவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கற்கும்போது எவ்வாறு ஞாபகம் உருவாகிறது ?
Memory இன் உருவாக்கத்தை இவ்வாறு பொதுவாகச் சொல்ல முடியுமானாலும் மாணவர்கள் படிக்கின்ற போது ஞாபகம் எவ்வாறு உருவாகி ஆழ்மனதில் பதிகிறது என்பதை சற்றுத் தனியா நோக்குவது மிகப் பொருத்தமானது.
ஒரு மாணவன் படிக்கின்றபோது பின்வரும் மூன்று செயன்முறைகள் இடம்பெறுகின்றன
Learning Or Encoding – தகவல்களை மனதில் பதித்தல்
Encoding – சேமித்து வைத்தல்
Recalling / Remember – ஞாபகமீட்டல்
இச்செயன்முறையை பின்வரும் குற்றிப்படத்தின் மூலம் நோக்கலாம்

ஓரு மாணவன் படிக்கின்ற போது முதலில் அது Short term Memory யில் பதிகிறது. இவ்வாறு பதிகின்ற தகவல்கள் பயிற்சிகள் மற்றும் மீட்டல் என்பற்றின் மூலம் ஆழ்மனதில் பதிகின்றன. இங்கு சேமிக்கப்படுகின்ற தகவல்கள் தேவையான சந்தர்ப்பங்களில் மீட்டப்படுகின்ற போதெல்லாம் அது மீண்டும் Working Memory ஆகத் தொழிற்பட்டு பிரயோசனமளிக்கிறது. டுழபெ வநசஅ ஆநஅழஅழசல க்கு அனுப்பப்டாத தகவல்களில் 65% இற்கும் அதிகமானவை படித்த அன்றே மறந்து விடுவிகின்றன என்பது மாணவர்களைப் பொறுத்தவரை கசப்பான தோர் உண்மையாகும்.
படிக்கின்ற ஒரு விடயத்தை எவ்வாறு Long term Memory க்கு அனுப்புவது?
அது ஒன்றும் Magic அல்ல, இதற்குத் தேவையானதெல்லாம் சிறியதொரு சுய முயற்சி மாத்திரமே. ஒரு வருக்கு பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கின்றது என வைத்துக் கொண்டால் அவர்களுள் ஒரு சிலரின் தொலை பேசி இலக்கங்கள் மாத்திரமே ஞாபகத்தில் நிற்கின்றன, ஏன்....? காரணம் அந்த இலக்கங்கள் மாத்திரமே அடிக்கடி சுழற்றப்படக் கூடியதாக இருப்பதாகும். இது போலவே, ஒவ்வொரு நாளும் படிக்கின்ற விடயங்களை அன்றே இரண்டுக்கு மூன்று தடைவகள் மீட்டுகின்ற போது அத்தகவல்கள் Short term Memory யிலிந்து Long term Memory க்கு அனுப்பப் படுகின்றன. பரீட்சைகளின்போது அல்லது வேறு தேவைகளின் போது சாதரண ஒரு மீட்டல் செய்கின்ற மாத்திரத்தில் இவை மீண்டும் ஞாபகத்தறிக்கு வந்து விடுகின்றன.
தேவையான விடயங்கள் ஏன் ஞாபகத்தில் நிற்பதில்லை?
ஒரு நாள் ரிஸான் என்ற மாணவன் தனது நண்பனை நோக்கி…“ அக்ரம்! சினிமாப் பாட்டு, இந்த நாடகம், சினிமாப்படம் ஞாபகமி நிற்கிற மாதிரி படிக்கிற ஒன்னுமே ஞாபகத்துக்கு வரமாட்டிங்குது… உனக்கு ஏதாவது காரணம் தெரியுமா?” என்று வினவினான். உண்மையில் இது ரிஸானுக்கு மாத்திரமுள்ள பிரச்சினையல்ல ரிஸானைப் போன்ற பல மாணவர்களும் அடிக்கடி உச்சரிக்கின்ற ஒரு பிரச்சினையாகும். இதற்குக் காரணம் இல்லாமலில்லை.
ஒருவர் படிக்கின்ற வழிமுறைகளுக் கேற்ப அவரின் மனதில் பதிகின்ற விடயங்களின் வீதமும் வேறுபடுகின்றதாக ஆய்கள் சுட்டிக்காட்டுகின்றன. பின் வருமாறு அது அமைகிறது.
ஒரு விடயத்தை……
• வாசிப்பதினூடாக 10%
• செவிமடுப்பதினூடாக 20%
• பார்ப்பதினூடாக 30%
• பார்ப்பதோடு செவிமடுப்பதினூடாக 50%
• பிறருடன் கலந்துரையாடுவதினூடாக 70%
• அவ்விடயத்தை சுயமாக அனுபவிப்பதினூடாக 80%
• பிறிதொருவருக்குக் கற்றுக்கொடுப்பதினூடாக 95%
மும் ஞாபகத்தில் பதிகின்றன.
இதனடிப்படையில் நோக்கும்போது ஒரு மாணவன் இவ்வழிமுறைகளைப் பயன் படுத்தும் போதுதான் படிக்கின்ற விடயங்களில் அதிகமானவை ஞாபகத்தில் பதிகின்றன என்பது தெளிவான உண்மையாகும்.
ரிஸான் போன்ற பெரும்பாலான மாணவர்களுக்கு நடப்பெதென்ன வெனில், பாடத்தை மீட்டுகின்றோம் என்ற பெயரில் பாடப்புத்தகத்தையோ, அல்லது ஆசிரியரின் பாடக் குறிப்பையோ வாசித்து விட்டு அல்லது பிறர் வாசிப்பதகைக் கேட்டுவிட்டு அல்லது தானே அக்குறிப்புகக்களை தன் கண்களால் பார்த்தவாறே உரத்த குரலில் வாசித்து விட்டு தான் பாடத்தை மீட்டிவிட்தாக முடிவு செய்கின்றனர். ஆனால் படிப்பதற்கென இங்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளினூடாகவும் அவரின் ஞாபகத்தில் பதியக்கூடிய அதி கூடிய அளவு 60%மாத்திரமே. ஏனைய 40 வீதமானவையும் மறந்து விடுகின்றன. மறு புறம் நாடகம், திரைப்படம், சினிமாப்பாட்டு, ஆபாசக் காட்சிகைகள் நிரம்பிய சஞ்சிகைகள் மற்றும் சம்பவங்கள் என்வற்றைப் கண்களால் பார்த்து, காதினால் செவிமடுப்பதோடு நின்று விடாது சக நண்பனேடோடு அவ்விடயங்களைக் கலந்துரையாடுகின்ற செற்பாடும் நடைபெறுகிறது. சில போது தான் அனுபவித்த விடயங்களை தனது நண்பனுக்கும் கற்றுக் கொடுக்கின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
விளைவாக படித்தவற்றில் 60% ஞாபகத்தில் பதிகின்ற அதே வேளை, ஒரு மாணவனுக்குப் பொருத்தமற்ற, அசிங்கமான விடயங்கள் 95% மனதில் பதிகின்றன. அத்தோடு ஏலவே படித்த விடயங்களையும் கூட ஞாபகத்திற்கு வரவிடாமல் தடுக்கின்ற ஒரு வேலையையும் இம்மோசமன விடயங்கள் செய்கின்றன. இதன் விளைவே ரிஸான் போன்ற மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும்.
என்ன செய்யலாம்?
தேவையற்ற விடயங்கள் ஞாபசக்தியை ஆழவிடது படித்த விடயங்களில் 95% மானவற்றை மனதில் பதித்துக் கொள்ள ஆர்வமுள்ள மாணவச் செல்வங்களுக்குச் சில துணுக்குகள்……
• எப்போதும் இறை சிந்தனையில் நிலைத்திருங்கள், இது மோசமான விடயங்களில் ஈடுபடுவதை விட்டும் ஒருவரைத் தடுப்பதோடு இறை அன்பையும் அவனது அருளையும் பெற்றுத் தருவதற்கு வழியாக அமைகிறது.
• எப்போதும் ளுநடக ளவரனல என்று அறையில் அடங்கிக் கிடக்காது கற்பதில் திறமையும் ஒழுக்கத்தில் முழுமையும் கொண்ட சக வகுப்பு மாணவர்களோனோடு இணைந்து படிக்க முற்படுங்கள். இதன்போது குழுக்கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அதே வேளை தனக்குத் தெரிந்த ஒன்றை அது பற்றித் தெரியாத சக நண்பனுக்கு கற்றுக் கொடுக்க முயற்சியுங்கள்.
• ஆபாசம் நிறைந்த காட்சிகளைப் பார்த்தல், மோசமான உணர்வுகளைத் தூண்டக் கூடிய சஞ்சிகைகளை வாசித்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருக்க பிரயத்தனங்களை மேற்கொள்ளுங்கள். மிகப் பிரபலமான நான்கு இமாம்களுள் ஒருவரான இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூட ஒரு முறை தனது ஆசானிடம் தனது மனன சக்தியின் மோசமான நிலை பற்றி முறையிட்டார்கள்;. அதற்கு அவரின் ஆசான் கூறிய பரிகாரம் என்ன தெரியுமா? ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதை விட்டும் தவிர்ந்திருங்கள் என்பதாகும். இத்தனைக்கும் இமாம் ஷாபிஈ அவர்கள் பார்த்தெதெல்லாம் ஒரு பெண்ணின் கரண்டைக் காலுக்குக் கீழ் உள்ள பகுதியையாகும். ஆதற்கே ஞாபக மறதி என்றால் நாங்கள் எவ்வளவு விடயங்களை விட்டும் தூரமாகி இருக்க வேண்டும்? சிந்தியுங்கள்…
• அதிககோபம், பொறாமை, பொய், புறம் மற்றும் நயவஞ்சகம் போன்ற தீய பண்புகளிலிருந்து தவிர்ந்த உள்ளத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இத்தகைய தீய காரியங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, இவை அதிகமாக ஞாபக மறதியை உண்டுபண்ணக் கூடிய காரணிகளாகக் காணப்படுவதாக சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
• அதிக நேசத்துக்குரிய ஒரு விடயம் வெகு இலகுவில் மறப்பதில்லை. மேலும் அதிக விருப்புக்குரிய ஒன்றின் மீதான கரிசனையும் அதில் காட்டுகின்ற ஈடுபாடும் ஏனை வற்றை விட அதிகமாகவே காணப்படும். எனவே கல்வியை நேசியுங்கள் அது கடைசி வரை உங்களோடு தோழமை கொள்ளும்.
• இறுதியாக! எதைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் நிறைவேற்றுங்கள், அதில்தான் சகல விடயங்களுக்குமானமான உண்மையான வெற்றி காணப்படுகின்றது.
எமது நேரத்தையும் தொடர் விடா முயற்சியையும் நாம் அடைய விரும்பும் ஒன்றில் முயற்சித்தால் வெற்றி என்பது வெகு தூரத்தில் இல்லை.








